ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபர்குசன் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்ததோடு, 24 மணி நேரத்திற்குள் மாற்று வீரரை அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தது.