நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அபித் அலி - அசார் அலி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபித் அலி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஹாரிஸ் சோஹைல், ஆலம், ரிஸ்வான் ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது.