உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் இதுவரை 34,01,189 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,39,604 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள், தன்னார்வு அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவுக்கு நிதி திரட்டும் விதமாக கடந்தாண்டு லார்ட்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் பயன்படுத்திய ஜெர்சியை நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் தனது நாட்டின் யுனிசெஃப் அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
#FoodForKiwiFamilies என்ற ஹேஷ்டாக்கை நியூசிலாந்து யுனிசெஃப் அமைப்பு முன்னெடுத்துள்ளது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களில் ஒரு அதிர்ஷ்டசாலி நபருக்குஇந்த ஜெர்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.