நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 91 ரன்களை எடுத்தார்.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு பிஜே வாட்லிங், மிட்சல் சாண்ட்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயத்தினர். இதில் வாட்லிங் இரட்டை சதமடித்தும், சாண்ட்னர் சதமடித்தும் அசத்தினர். இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 615 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.