தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரெட்ரோ ஸ்டைலுக்கு மாறிய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள்...! - New Zealand and Aus turn into retro jersey

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தங்களது ரெட்ரோ ஸ்டைல் ஜெர்சியில் களமிறங்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

new-zealand-and-aus-turn-into-retro-jersey
new-zealand-and-aus-turn-into-retro-jersey

By

Published : Mar 10, 2020, 7:27 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் இரு அணிகளும் தங்களது ரெட்ரோ ஸ்டைல் ஜெர்சியை பயன்படுத்தவுள்ளன.

ஆஸ்திரேலிய அணி 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது பயன்படுத்திய ஜெர்சியுடனும், நியூசிலாந்து அணி 2000ஆம் ஆண்டு மினி உலகக்கோப்பைத் தொடரின்போது பயன்படுத்திய ஜெர்சியுடனும் களமிறங்கவுள்ளனர்.

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இரு அணி வீரர்களும், மீண்டும் பழைய ஜெர்சியை அணிந்துள்ளதால் ரசிகர்கள் தங்களது நாஸ்டால்ஜிக் மொமெண்ட்களை நினைவுப்படுத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இந்திய ரசிகர்கள் சிலர் இந்திய அணி மீண்டும் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை இந்திய அணி பயன்படுத்தி சில தொடர்களில் ஆடவேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரஞ்சி டிராபி போட்டியில் நடுவருக்கு ஏற்பட்ட காயம்! - எதனால் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details