இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு, நடனமாடுதல், முடி திருத்துதல், சமையல் செய்தல் எனப் பல வேலைகளைச் செய்து நேரத்தைக் கடத்திவருகின்றனர்.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சில தினங்களுக்கு முன்பு சிவாஜி ரஜினி ஸ்டைலில் மொட்டை தலையுடன், கறுப்புக் கண்ணாடி, கறுப்பு பிளேஸர் என மாஸான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இணையத்தை அலறவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் நேரலையில் பேசிய கபில்தேவ், "என்னுடைய ஹீரோக்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், மகேந்திர சிங் தோனி இருவரையும் பின்தொடர்ந்தே நான் இந்தப் புதிய லுக்கிற்கு மாறியுள்ளேன்.