தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சூதாட்டத்தை சட்ட ரீதியாக விரும்பவில்லை- பிசிசிஐ

சூதாட்டத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், சூதாட்டத்தை சட்ட ரீதியாக விரும்பவில்லை என பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் சபீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

REVERT IT
REVERT IT

By

Published : Apr 5, 2021, 10:39 PM IST

டெல்லி: பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய தலைவர் சபீர் ஹுசைன் சேக்கதம் கண்ட்வாலா, “நாட்டில் சூதாட்ட பந்தயங்கள் சட்டப்பூர்வமாக்கப்படுவதை விரும்பவில்லை, ஏனெனில் இது போட்டியை நிர்ணயிப்பதை ஊக்குவிக்கிறது” என்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அரசாங்கம் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குகிறதா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் ஆழமாக பார்த்தால், சூதாட்ட பந்தயம் போட்டியை நிர்ணயிப்பதற்கு வழிவகுக்கும். இதை நான் ஒரு காவல் அலுவலராக உணர்கிறேன். இதுவரை சூதாட்டத்தை சட்டமாக்கவில்லை, இனியும் அது தொடரும் என்றே கருதுகிறேன். பொதுவாக சூதாட்ட பந்தயங்கள் போட்டியை நிர்ணயிப்பதை ஊக்குவிக்கிறது. எனவே இதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.

வருங்காலங்களில் விதிகளை இன்னும் கண்டிப்பாக மாற்றலாம். நாங்கள் அதைச் செய்வோம். கிரிக்கெட் பெரும்பாலும் ஊழலிலிருந்து விடுபட்டுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம். இந்தப் பெருமை பிசிசிஐ-யை சேரும்” என்றார்.

முன்னதாக பி.சி.சி.ஐ தலைவரும் மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாக்கூர், “கடந்தாண்டு சூதாட்ட விளையாட்டு நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்க பரிந்துரைத்திருந்தார். இருப்பினும், குஜராத்தின் முன்னாள் டி.ஜி.பி கண்ட்வாவாலா இந்த விஷயத்தில் வேறுவிதமாக உணர்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சில நாடுகளில் பந்தயம் சட்டப்பூர்வமாக இருக்கலாம், ஆனால் விளையாட்டை மைதானத்தில் நேரில் பார்க்கவும், தொலைக்காட்சியில் அதைப் பார்க்கவும் பலர் விரும்புகின்றனர். இம்மக்கள் இந்த விளையாட்டை முழுமையாக நம்புகிறார்கள். ஆகவே, விளையாட்டின் முடிவை சரிசெய்ய முடியும் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும்.

இந்த எண்ணத்துடனும் யாரும் மைதானத்திற்குச் செல்ல வேண்டாம். விளையாட்டு ரசிகர்களின் நம்பிக்கையை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இதுவே ஆரோக்கியமான விளையாட்டுக்கு வழிவகுக்கும். நமது சிறந்த வீரர்கள் மிகச் சிறந்த ஊதியம் பெறுகிறார்கள், அவர்கள் போட்டியை நிர்ணயிக்கும் அபாயத்திலிருந்து மைல்கள் கணக்கில் தொலைவில் உள்ளனர்.

அதைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். நான் ஒரு காவல் அலுவலராக இருந்த காலத்தில், குஜராத்தில் பல போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளேன். சிறுவயதிலிருந்தே நான் விளையாட்டை நேசித்தேன். கடந்த காலங்களில் நிறைய நல்ல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன, அதை நான் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். வீரர்களையும் சூதாட்டத்திலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 14 திருவிழா வருகிற 9ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடர்ந்து தலை தூக்கும் ஆன்லைன் மோசடி தற்கொலைகள்-தீர்வு கூறும் மனநல மருத்துவர் யாமினி

ABOUT THE AUTHOR

...view details