ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 எனப்படும் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே பத்து அணிகள் தேர்வு பெற்ற நிலையில் மீதமுள்ள ஆறு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் துபாயில் நடைபெற்று அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று அரையிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் மேக்ஸ் ஒஉட், பென் கூப்பர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் 14 ரன்களில் ஒஉட் வெளியேற, கூப்பர் 37 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ரியன் டென் டோஸ்சட்டே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது.