தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடர் : குறைந்தபட்சம் 50 வீரர்களிடம் ஊக்க மருந்து பரிசோதனை! - ஐபிஎல் 2020

ஹைதராபாத் : அடுத்த மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டித்தொடரில் பங்கேற்கும் வீரர்களில், குறைந்தபட்சம 50 பேரிடம் ஊக்க மருந்து சோதனையை நடத்த தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை திட்டமிட்டுள்ளது.

குறைந்தபட்சம் 50 வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை
குறைந்தபட்சம் 50 வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை

By

Published : Aug 26, 2020, 10:22 AM IST

கரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், மூன்று மாதங்களுக்கு பின்னரும் இந்தியாவில் கரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதனால் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்படி, அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்நடைபெறவுள்ளன. இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்க எட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று, அங்கு தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ள ஏதுவாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் அலுவலர்கள் விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர்.

ஊக்க மருந்து சோதனைகளை எளிதில் மேற்கொள்ள, போட்டிகள் நடைபெறும் துபாய், அபு தாபி, சார்ஜா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் ஊக்க மருந்து கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல் வீரர்கள் பயிற்சி பெறும் இடங்களில் இரண்டு ஊக்க மருந்து கட்டுப்பாட்டு நிலையங்களை அமைக்க ஊக்க மருந்து தடுப்பு முகமை திட்டமிட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறும்போதும், இல்லாதபோதும் என இரு சூழலிலும் மொத்தம் 50 பேரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ரத்த மாதிரிகளும் வீரர்களிடம் இருந்து சேமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 50 வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை

இந்தத் தொடரின்போது நட்சத்திர வீரர்களான தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோரிடமும் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை ஊக்க மருந்து சோதனை நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

இதையும் படிங்க: சச்சினின் சாதனையை கோலி அசால்ட்டாக முறியடிப்பார்: இர்ஃபான் பதான்!

ABOUT THE AUTHOR

...view details