தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (National Anti Doping Agency) கண்காணிப்பின் கீழ் பிசிசிஐ கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு உள்ளூர் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் பலரும் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான ரஞ்சி போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது.இதில், ஊக்கமருந்து பரிசோதனைக்காக டெல்லி அணியின் தொடக்க வீரர் குனல் சண்டிலா, ஹைதராபாத் அணியின் கேப்டன் தன்மயி அகர்வால் ஆகியோரது சிறுநீர் மாதிரிகளை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு சேகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த மாதிரிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தில் சோதிக்கப்படவுள்ளது.