இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜன.26) நடைபெற்ற இரண்டாவது காலிறுதிச்சுற்றில் தமிழ்நாடு அணி - ஹிமாச்சல் பிரதேசம் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஹிமாச்சல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அபிமன்யூ ரானா 28 ரன்களிலும், சோப்ரா 6 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷி தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். பின்னர் 35 ரன்களில் ரிஷி தவானும் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹிமாச்சல் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.