தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தனிமைப்படுத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்... மனைவியின் ஜாலி கடிதம்...! - Mitchell McClenaghan isolated

பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய நியூசிலாந்து வீரர் மிட்சல் மெக்லனகன் 14 நாள்களுக்கு அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

mumbai-indians-pacer-mitchell-mcclenaghan-isolated
mumbai-indians-pacer-mitchell-mcclenaghan-isolated

By

Published : Mar 17, 2020, 12:02 PM IST

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மிட்சல் மெக்லனகன். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். சமீபத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பிஎஸ்எல் தொடரிலிருந்து பாதியிலேயே அவர் விலகினார்.

இதையடுத்து பாகிஸ்தானிலிருந்து நியூசிலாந்து புறப்பட்ட மெக்லனகன் ஆஸ்திரேலியா வழியாக சென்றுள்ளார். இதனால் அந்நாட்டு அரசு வெளிநாடுகளிலிருந்து நியூசிலாந்து வரும் அனைத்து பயணிகளையும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு சரியான பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது.

இதனால் நியூசிலாந்து வீரர் மிட்சல் மெக்லனகன் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார். தனிமைப்படுத்தப்பட்ட மெக்லனகனுக்கு மனைவி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ''தனியாக இருக்கும்போது நீ விரக்தியடைந்தால், இதேபோல் உன் மனைவியுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் என்ன சூழல் இருக்கும் என்பதை யோசித்துக்கொள்'' என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸ்: முகத்தை தொட முடியாமல் மிஸ் செய்யும் ட்ரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details