தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ராயுடுவின் ஓய்வு முடிவு: மனம் திறக்கிறார் தேர்வு குழுத் தலைவர்! - k l rahul

மும்பை: அம்பத்தி ராயுடுவின் ஓய்வு முடிவு தனக்கும் வருத்தம் அளிப்பதாக முதன்மைத் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

ராயுடு-கேதர் ஜாதவ்

By

Published : Jul 23, 2019, 1:43 PM IST

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகிய மூன்று நிலைக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இது குறித்து முதன்மைத் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

சுப்மன் கில்

கேள்வி: ரஹானேக்கு டி20, ஒருநாள் தொடர்களில் சரியாக வாய்ப்பளிக்கவில்லையே ஏன்?

பதில்: அவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்றுதான் இருந்தோம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்தியா ஏ அணி வீரர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம். ரஹானேவை தேர்வு செய்யாததற்கு இதுவே காரணம்.

கேதர்-தினேஷ் கார்த்திக்

கேள்வி: இந்திய ஏ அணியில் ஆடிய மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி ஆகியோரை தேர்வு செய்துள்ளீர்கள். ஆனால், நன்றாக ஆடிய சுப்மன் கில்லை ஏன் தேர்வு செய்யவில்லை?

பதில்: ராகுல் சில போட்டிகளில் இடைநீக்கம் செய்யப்பட்டபோது அவருக்குப் பதிலாக சுப்மன் கில்லை நியூசிலாந்து அனுப்பினோம். தற்போது ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளதால் கில்லை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளோம். கண்டிப்பாக இனிவரும் காலங்களில் அவருக்கு வாய்ப்பளிப்போம்.

மயங்க் அகர்வால்-ராகுல்

கேள்வி: உலகக்கோப்பைத் தொடரில் கேதர் ஜாதவ் சரியாக விளையாடாத காரணத்தினால் அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கை ஆட வைத்தீர்கள். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிவிட்டு கேதர் ஜாதவுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறீர்கள்...?

பதில்: கேதர் ஜாதவை தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கு உலகக்கோப்பைத் தொடரில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவருக்குக் கொடுத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்தியுள்ளார். அதனால் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம்.

ராயுடு ட்விட்

கேள்வி: காயமடைந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்தையும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய் சங்கருக்குப் பதிலாகத் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

பதில்: ஏற்கனவே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் அணியிலிருந்த காரணத்தினால் அணிக்கு ஒரு இடது கை ஆட்டக்காரர் கட்டாயம் தேவை என்பதால் ரிஷப் பந்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்தோம். இங்கிலாந்துடனான போட்டியில் ராகுலுக்குக் காயம் ஏற்பட்டதால் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்தோம்.

ரிஷப் பந்த்

கேள்வி: உலகக்கோப்பை இந்திய அணியில் ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கரைத் தேர்வு செய்ததால் ராயுடு அதைக் கேலியாக ட்வீட் செய்தார். அதனால்தான் சங்கருக்குக் காயம் ஏற்பட்டும் ராயுடுவை அழைக்காமல் மயங்க் அகர்வாலை அழைத்ததற்கு என்ன காரணம்?

ரஹானே

பதில்: வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ராயுடுவின் அந்த ட்விட்டை நான் ரசித்தேன். அந்த ட்விீட் நக்கலாக இருந்தது. அவரின் ஓய்வு முடிவு எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.

ABOUT THE AUTHOR

...view details