இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனியின் எதிர்காலம், விராட் கேப்டன்சி எனப் பல்வேறு விஷயங்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.
அந்தப் பேட்டியில், ''கேப்டன்சி என்று எடுத்துக்கொண்டால் தோனி, விராட், ரோஹித் ஆகிய மூன்று பேருக்கும் தனித்துவமான குணமுண்டு. தனித்துவ பாணியைக் கடைப்பிடிப்பார்கள்.
தோனியைப் பொறுத்தவரையில் கேப்டன் கூல். அவர் மனதில் என்ன வைத்துள்ளார் என்பதை அவர் சொல்லாமல் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. விராட் கோலியைப் பொறுத்தவரையில் அவருக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிடுவார். ரோஹித் ஷர்மா எப்போதும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நினைப்பார். ஒவ்வொரு வீரரையும் அவரது நிலையிலிருந்து சிந்திப்பார்.