இந்திய அணிக்கு இரு உலகக்கோப்பையை பரிசளித்தவர், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் தற்போது ராஞ்சியில் நடைபெற்றுவரும் உள்ளூர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருக்குச் சென்றுள்ளார்.
டென்னிஸில் களமிறங்கிய தல தோனி
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் தோனி இந்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ளதுதான்.
மேலும், எம்.எஸ். தோனியின் ரசிகர் ஒருவர் பகிர்ந்துகொண்ட காணொலியில், தோனி ஆண்கள் இரட்டையர் போட்டியில் டென்னிஸ் விளையாடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல டென்னிஸிலும் நாங்கதான் சாம்பியன் - கெத்துக்காட்டிய தல
தோனி தனது சொந்த ஊரில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ராஞ்சியில் நடந்த ஜே.எஸ்.சி.ஏ. கன்ட்ரி கிரிக்கெட் கிளப் டென்னிஸ் தொடரில் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டென்னிஸ்: ஜோகோவிச்சை அடிக்க ஃபெடரருக்கு வாய்ப்பு