இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தோனி, கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், தோனி பற்றி வரும் செய்திகளே அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் இந்திய ஸ்விங் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் 2007ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் நடுவில் தோனியின் கேப்டன்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார். 2007ஆம் ஆண்டில் தான் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதேபோல் 2013ஆம் ஆண்டில் கேப்டன்சியின் முக்கியமான நாள்களில் இருந்தார்.
இந்நிலையில், இந்த வித்தியாசம் குறித்து பேசிய இர்ஃபான் பதான், ''முதன்முறையாக கேப்டன்சி கிடைக்கும்போது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் 2007ஆம் ஆண்டுதோனி கேப்டன்சியின்போது நடக்கும் டீம் மீட்டிங் ஐந்து நிமிடங்கள் தான் நடக்கும்.