தமிழ்நாடு

tamil nadu

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக தேர்வான தோனி..!

By

Published : Dec 24, 2019, 10:46 AM IST

மெல்போர்ன்: 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை விளையாடிய தலைசிறந்த வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா உருவாக்கும் ஒருநாள் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார்.

MS Dhoni named captain of Cricket
MS Dhoni named captain of Cricket

2019ஆம் ஆண்டு முடிந்து 2020ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் குறிபிடத்தக்க விஷயாமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்த அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணி சார்பில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர்கள் ஹாசிம் அம்லா, ஏ பி டி வில்லியர், இலங்கை அணியின் மலிங்கா, இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர், வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணி வீரர்கள்:

  1. ரோஹித் சர்மா - இந்தியா
  2. ஹசிம் அம்லா - தென் ஆப்பிரிக்கா
  3. விராட் கோலி - இந்தியா
  4. ஏ பி டி வில்லியர்ஸ் - தென் ஆப்பிரிக்கா
  5. ஷாகிப் அல் ஹசன் - வங்கதேசம்
  6. ஜோஸ் பட்லர் - இங்கிலாந்து
  7. எம்.எஸ். தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்) - இந்தியா
  8. ரஷித் கான் - ஆப்கானிஸ்தான்
  9. மிட்சல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா
  10. டிரண்ட் போல்ட் - நியூசிலாந்து
  11. லசித் மல்லிங்கா - இலங்கை

இந்நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்காத தோனியை, அடுத்தாண்டு நடைபெறவுள்ள இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களிலிருந்து மீண்டும் இந்திய தேர்வு குழுவினர் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான கோலி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details