சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் இயங்கிவரும் வேலம்மாள் பள்ளியில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவும், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஷேன் வாட்சன் கலந்துகொண்டார்.
அவருக்கு மாணவர்கள் நடனமாடியும், பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பளித்தனர். இதையடுத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு வாட்சன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும் மாணவர்களுடன் கேள்வி-பதில் முறையில் கலந்துரையாடினார்.
பின்னர் தோனியின் ஓய்வு குறித்து செய்தியாளர்கள் வாட்சனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு வாட்சன், " தோனி தனக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துவருகிறார். அவர், இப்போதும் சிறப்பான ஃபார்மில்தான் உள்ளார். என்னை பொறுத்தவரையில், அவர் இளம் வீரர்களைப் போலதான் கிரிக்கெட் விளையாடுகிறார். ரன் ஓடும் போதும் சரி, விக்கெட் கீப்பிங்கிலும் சரி மிகவும் வேகத்துடன்தான் செயல்படுகிறார்.