இந்திய கேப்டனாக வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி 28 போட்டிகளுக்கு தலைமை தாங்கி 11 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் இருந்தார்.
தோனியின் சாதனை சமன்; தாதாவின் சாதனையை தெறிக்கவிட்ட கிங் கோலி! - kohli tops the List with 12 away wins
ஆண்டிகுவா: வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பெற்ற வெற்றியை கடந்து அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை கேப்டன் கிங் கோலி படைத்துள்ளார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் கேப்டன் கோலி தலைமையில் 26 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதனால் வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார்.
இதில் மூன்றாவது இடத்தில் ஆறு வெற்றிகளுடன் தோனியும், ஐந்து வெற்றிகளுடன் டிராவிட்டும் உள்ளனர். அதேபோல், அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என 27 வெற்றிகளுடன் தோனி வசம் இருந்த சாதனைய, இந்த வெற்றியின் மூலம் கோலி சமன் செய்துள்ளார். இதனை கோலி ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.