இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் முகமது ஷமி. இந்நிலையில், உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 பெருந்தொற்றினால், பல நட்சத்திர விளையாட்டு வீரர்கள் சுயத்தனிமை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதானுடனான இன்ஸ்டாகிராம் நேரலை விவாதத்தில்(Instagram live session) இணைந்த முகமது சமி, தனது உலகக்கோப்பை பயணத்தைப் பற்றிய தருணங்களை நினைவுக்கூர்ந்துள்ளார்.
அதில் ஷமி கூறுமையில், விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் ஒரு சில நேரங்களில் முக்கியமான போட்டிகளில், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி ஒரு சூழ்நிலையில் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்திய உலகக்கோப்பைத் தொடரில் விளையாடினேன். அத்தொடரின் முதல் போட்டியின் போதே எனது முழங்காலில் காயம் ஏற்பட்டது. என்னால் நடக்கக்கூட முடியவில்லை. மேலும் நான் வலியைப் போக்குவதற்காக மூன்று வலி நிவாரணி ஊசிகளை போட்டுக்கொண்டேன்.
2015 உலகக்கோப்பை தொடரின் போது ஷமி அப்போது அணியின் மருத்துவ ஆலோசகர் நிதின் படேல் எனக்கு நம்பிக்கையளித்தார். இருப்பினும் எனது காலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டுமென மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது நான் சிந்தித்தது ஒன்று மட்டும் தான். என்னால் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நான் உலகக்கோப்பையில் விளையாட முடியாது என்பது மட்டும்தான்.
பிறகு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக நான் அணி நிர்வாகத்திடன், எனது வலியை இதற்கு மேலும் என்னால் தங்கிக்கொள்ள இயலாது என்று கூறினேன். உடனடியாக தோனி என்மீது நம்பிக்கை வைத்து உங்களால் முடியும் என்று ஊக்கமளித்தார். அந்தப்போட்டியின் முதல் ஓவரில் நான் 13 ரன்களை கொடுத்தபிறகு மைதானத்தை விட்டு வெளியேறினேன்.
2019 உலகக்கோப்பைத் தொடரில் அதன்பின் தோனியிடம், இதற்கு மேலும் என்னால் பந்துவீச இயலாது என்று தெரிவித்தேன். ஆனால் இப்போது பகுதிநேர பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது. உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள். 60 ரன்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று தோனி கேட்டுக்கொண்டார். நான் ஒருநாளும் இதுபோன்று ஒரு நிலையில் இருந்தது இல்லை. ஒருசிலர் என்னுடைய பயணம் முடிந்ததாக கூறினர். ஆனால் நான் தற்போதும் அதே பயணத்தில் தொடர்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் முன்னோடிகள்!