தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கபில்தேவ், ஸ்ரீநாத் வரிசையில் இணைந்த முகமது ஷமி! - முகமது ஷமியின் டெஸ்ட் விக்கெட்டுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.

Mohammed Shami

By

Published : Sep 2, 2019, 6:29 PM IST

இந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமி வேகப் பந்துவீச்சாளராக வலம் வருகிறார். இவர் தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணி ஜமைக்காவில் நடைபெற்றுவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பலப்பரீட்சை நடத்திவருகிறது. இதில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை சேர்த்தது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களுக்கு சுருண்டது.

இதில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வாலை அவுட் செய்ததன்மூலம் முகமது ஷமி தனது 42ஆவது டெஸ்ட் போட்டியில் 150ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் (39 போட்டிகள்), ஜவகல் ஸ்ரீநாத் (40 போட்டிகள்) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

முகமது ஷமி

அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 15ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், ஜவகல் ஸ்ரீநாத் 67 டெஸ்ட்களில் 236 விக்கெட்டுகளையும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details