தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 24, 2019, 4:35 PM IST

ETV Bharat / sports

”அவரை விளையாட அனுப்பாதீர்கள்” - முகமது ஹபீஸ் கோரிக்கை!

லாகூர்: பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கு அனுப்ப வேண்டாம் என அந்த அணியின் சீனியர் வீரர் முகமது ஹபீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Mohammad Hafeez urges PCB
Mohammad Hafeez urges PCB

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரில் அதிகம் பேசப்பட்ட நபராக விளங்கியவர் 16 வயதேயான பகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா.

வேகப்பந்துவீச்சாளர் நஷிம் ஷா

அதற்கு காரணம் இவர் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இளம் வயதில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்ததுதான்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரரான முகமது ஹபீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம், அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடருக்கு நசீம் ஷாவை அனுப்ப வேண்டாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாட நசீம் ஷாவை அனுப்ப வேண்டாம் என்று ஜூனியர் தேர்வுக் குழுவுக்கு தாழ்மையான பரிந்துரையை விடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஷா ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார், அவர் அதில் சிறந்து விளங்க தொழில்நுட்ப ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடினமாக உழைக்க வேண்டும். அதனால் அவரை அனுப்பவேண்டாம். வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரையாவது அனுப்ப இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது பலனளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.


இதையும் படிங்க: பிக் பாஷ்: பேக் டூ பேக் இரண்டு சிக்ஸ்... இரண்டு விக்கெட்..! ஓரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ரஷித் கான்
!

ABOUT THE AUTHOR

...view details