இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், மாஸ்யூர், முகமது இம்ரான் ஆகிய வீரர்கள் இங்கிலாந்திலுள்ள டெர்பிசைரில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க விரைவில் அனுப்பபடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
28 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இவரது இந்த முடிவை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-கக் உள்பட மூத்த வீரர்கள் பலரும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தனர்.
அத்துடன், நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட முகமது அமீருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர் .