ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் நடராஜன், அறிமுகமானார். தனது அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் நடராஜனுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவு மூலம் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.