தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்த நாள் எனக்கு இனிய நாள்!- மித்தாலி ராஜ் - மித்தாலி ராஜ்

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் தனக்காக விழா நடத்திய dear comrade படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

dear comrade படக்குழுவினருடன் மித்தாலி ராஜ்

By

Published : Jul 28, 2019, 7:24 PM IST

சமீபத்தில் வெளியாகியிருக்கும் “dear comrade" படம் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலைப் பேசுகிறது. இந்தப் படத்தின் நாயகி ராஷ்மிகா கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக நடித்திருக்கிறார். இந்நிலையில், dear comrade படக்குழுவினர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜை அழைத்து விழா நடத்தினர்.

அந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர், மித்தாலி ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், “ விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளின் சிரிப்பைக் கண்டு பெரு மகிழ்வடைந்தேன். இந்த நாள் இதைவிட சிறப்பாக அமையாது. இதனை ஈடு செய்ய வேறு எதுவாலும் முடியாது. விழாவை ஏற்பாடு செய்த படக் குழுவினருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மித்தாலி ராஜ் ட்விட்

மித்தாலி ராஜ் சர்வதேச அளவில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details