நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் மிட்செல் சாண்ட்னர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் இந்தியாவின் உள்ளூர் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சாண்ட்னர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஐபிஎல் தொடரானது உலகின் மற்ற டி20 தொடர்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். நான் 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டதையடுத்து மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஏனெனில் அந்த அணியில் ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் போன்ற உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் பேசவும், விளையாடவும் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.