உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் பல்வேறு அணிகள் தங்களது பயிற்சியாளர்களை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான், அணியின் தலைமை பயிற்சியாளரை நீக்கிவிட்டு தற்போது அதற்கான தேடல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்தப் பதவிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் அக் விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதிவிக்கான ஊதியத் தொகை பற்றி அறிவித்துள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்த்தருக்கு நிகரான ஊதியத்தை தனக்கு அளிக்கவேண்டும் என மிஸ்பா கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதற்கு பிசிபி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஏனெனில் மிஸ்பா ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் விதிபடி ஒரு துறையில் பணிபுரிபவர்கள் வேறு துறையில் பணியாற்றக் கூடாது. அதனால் மிஸ்பா பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நிமியக்கப்பட்டால் அவர் பிஎஸ்எல் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அப்படி அவர் பிஎஸ்எல் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் மிஸ்பா உல் அக்கிற்கு அவர் கேட்ட ஊதியத் தொகையை வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.