உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் பயிற்சியாளர்களை மாற்றிவருகின்றது. சமீபத்தில் இந்தியா, பங்களாதேஷ் போன்ன்ற அணிகள் தங்களது பயிற்சியாளர்களுக்கான தேர்வை தொடங்கியது.
இந்நிலையில் பாக்கிஸ்தான் அணியும், உலகக்கோப்பை தொடரில் அடைந்த படுதோல்வி காரணமாக அந்த அணியின் பயிற்சியாளரை மாற்ற முடிவு செய்துள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் பெறப்படும் நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ’இந்த பட்டியலில் எனது பெயரும் இடம்பிடித்துள்ளதற்கு நான் மிகவும் பெருமைக்கொள்கிறேன். நான் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறேன்’ என்றார்.
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, டீன் ஜோன்ஸ், மைக் ஹொசைன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.