தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இந்திய ஆடுகளங்கள் மொக்க...' - விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனை வசைபாடிய ட்விட்டர்வாசிகள்

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ஆடுகளங்கள் குறித்து விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை ட்விட்டர்வாசிகள் வறுத்தெடுத்தனர்.

michael vaughan

By

Published : Oct 12, 2019, 3:15 PM IST

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் விளையாடிவருகிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று டிக்ளர் செய்தது. இந்திய அணியின் கேப்டன் கோலி அபாரமாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 254 ரன்களும் மயாங்க் அகர்வால் 108, ஜடேஜா 91, ரஹானே 59, புஜாரா 58 ரன்களையும் குவித்தனர்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி விரைவாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகள் இந்திய பந்துவீச்சில் சீட்டுக்கட்டுபோல் சரிந்தது. அந்த அணியின் கேப்டன் டூபிளஸ்ஸிஸ் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த 212 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், இந்திய டெஸ்ட் ஆடுகளங்கள் குறித்து விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் அந்தப் பதிவில், "இந்தியாவில் உள்ள டெஸ்ட் ஆடுகளங்கள் மிகவும் சலிப்புமிக்கதாக உள்ளது. அதிலும் முதல் மூன்று நாள்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே அவை உள்ளன. பந்துவீச்சாளர்களும் செயல்படும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

மைக்கேல் வாகனின் ட்வீட்டிற்கு பதிலளித்த இந்திய ரசிகர்

அவரின் இந்தக் கருத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இங்கிலாந்தைவிட இந்திய ஆடுகளங்கள் சிறப்பாகவே உள்ளன. ஏனெனில் இங்கிலாந்து ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டியின்போது அனைத்து நாட்களிலும் மழையின் குறுக்கீடு இருக்கும். மேலும் அங்கு முறையான வடிகால் வசதிகள் இல்லை என்பது போன்ற குறிப்பிட்டனர். மேலும், மழைக்குறுக்கிட்டதால் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப்போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details