கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சம் காரணமாக இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல்லில் அதிக முறைச் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், தற்போதுள்ள தனது மனநிலையைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.