தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரித்விக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் - மைக்கேல் ஹஸ்ஸி - மைக்கேல் ஹஸ்ஸி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த பிரித்வி ஷாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

MCG pitch will suit him a lot more: Hussey backs Prithvi Shaw
MCG pitch will suit him a lot more: Hussey backs Prithvi Shaw

By

Published : Dec 22, 2020, 7:01 PM IST

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து ஏமாற்றமளித்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா, முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமலும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களுடனும் நடையைக் கட்டினார்.

மைக்கேல் ஹஸ்ஸி ஆதரவு

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் ஹஸ்ஸி, " என்னைப் பொறுத்தவரை இந்திய அணி தேர்வு குழுவினர் பிரித்வி ஷாவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். அவர் முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுவெறும் ஒரு போட்டி. அதுவும் வலிமையான பந்துவீச்சினால் அவருக்கு இது நிகழ்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:NZ vs Pak: ரிஸ்வான் அதிரடியில் ஆறுதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான்

ABOUT THE AUTHOR

...view details