இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. தற்போது டி20 தொடர் முடிவடையவுள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான மாற்றம் செய்யப்பட்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ஷிகர் தவான், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணி: கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த், சிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்
இதையும் படிங்க: ஐஎஸ்எல், ஐ லீக் அணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!