தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸி., வீரர் மேக்ஸ்வெல் ஆடுவதில் சந்தேகம் - ஆஸ்திரேலிய அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

By

Published : Mar 21, 2019, 10:18 PM IST

பாகிஸ்தான் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடந்த ஒருவார காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான மேக்ஸ்வெல், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் நாளை நடைபெறும் போட்டியில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேக்ஸ்வெல் அதிரடியாக ரன்குவித்தார். பெரும்பாலான சமயங்களில் ஆஸ்திரேலிய அணி சரிவை சந்திக்கும்போது, அவர் அசால்ட்டாக வந்து எதிரணியின் பவுலர்களை திணறடித்து விடுவார். அந்த அளவிற்கு அவரின் ஆட்டம் இருக்கும்.

ஆனால் மேக்ஸ்வெல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, வயிற்றுக்கோளாறில் அவதிப்பட்டு வந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன், நேற்று மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.

ஷார்ஜா மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடம்ஸம்பா

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரன் பிஞ்ச் கூறுகையில், இந்த மைதானத்தின் சூழலை பார்க்கும்போது நாளைய போட்டியில் சுழற்பந்துவீச்சு திருப்புமுனையாக அமையும் என்றே கருதுகிறேன். நேற்றைய பயிற்சியின் போது மைதானம் நாங்கள் நினைத்ததைப் போன்று இருந்தது.

எனவே அணியில் லயன், மற்றும் ஆடம்ஸம்பா என இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது குறித்து பின்னரே தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details