இந்தாண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது.
இத்தொடர்களுக்கான அணிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 27) அறிவித்தது. அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான டி20 அணியின் துணைக் கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இளம் வீரர்களான தன்வீர் சங்கா, ரிலே மெரிடித் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலிய, தனது டெஸ்ட் அணியையும் இன்று அறிவித்தது. இந்திய அணிக்கெதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மீண்டும் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் மேத்யூ வேட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரிக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டி20 அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கே), மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹரெண்டோர்ஃப், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டெர்மொட், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, டி ஆர்சி ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: டிம் பெய்ன் (கே), பாட் கம்மின்ஸ், சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுசாக்னே, நாதன் லையன், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க் ஸ்டெக்கீ, மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.
இதையும் படிங்க:'இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம்' - சில்வர்வுட்