இந்தியாவில் 1999, 2000ஆம் ஆண்டுகளில் சூதாட்டப் புகார் உச்சத்தில் இருந்ததால், இந்திய கிரிக்கெட் அதள பதாளத்துக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக, 2000ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்துப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
இந்தத் தொடரின்போது அப்போதைய இந்திய அணியின் கேப்டன் அசாருதின், ஹன்சி குரோனியே ஆகியோர் சூதாட்ட புகாரில் சிக்கி தங்களது கிரிக்கெட் வாழ்வை தொலைத்துவிட்டனர். இதில் சிக்கிய ஹன்சி குரோனியே 2002இல் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்ற இடைத்தரகர் சஞ்சீவ் சாவ்லா, 20 ஆண்டுகளுக்கு பின் கடந்த பிப்ரவரி 12 டெல்லி காவல்துறையினரால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவர் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் பஹா, பிரிட்டன் - இந்தியாவுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட நாடுகடத்தல் ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த கைது உள்ளது என வாதாடினார். இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி சஞ்சீவ் சாவ்லா டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க:யார் இந்த சஞ்சீவ் சாவ்லா? சூதாட்டப் புகாரில் முன்னாள் வீரர்கள் பலர் சிக்குவார்களா?