வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்தாண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், சில்ஹெட் தண்டர் அணி, சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதனையடுத்து களமிறங்கிய தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில், நான்கு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது மித்துன் 84 ரன்களை எடுத்தார்.
அதற்கு பிறகு சேலஞ்சர்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்த போது, இந்த சர்ச்சை அரங்கேறியது. இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை வீசிய தண்டர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளார் கிருஷ்மர் சன்டொக்கி(Krishmar Santokie), தனது இரண்டாவது பந்தை மிகப்பெரிய வைடாக வீசினார்.
அப்போது அவரின் பந்துவீச்சு குறித்த சந்தேகங்கள் பார்வையாளக்குத் தோன்றின. அதனைத் தொடர்ந்து அவர் அதே ஓவரின் நான்காவது பந்தை நோ பாலாக வீசினார். அதனை காணொலி மூலம் கண்ட போது, அவரின் கால் கோட்டை விட்டு இரண்டு அடி தள்ளியிருப்பதைக் கண்ட ரசிகர்கள், இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என கத்த தொடங்கினர்.
மேலும் இவர் அந்தப் போட்டியில் மட்டும் நான்கு ஓவர்களில் ஒரு நோ பால், நான்கு வைடு பந்துகள் என 34 ரன்களை கொடுத்திருந்தார். இதனால் சேலஞ்சர்ஸ் அணி 19 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளரான கிருஷ்மர் சன்டொக்கி, ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் மூலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐசிசிக்கு ட்விட்டரில் குறுந்தகவல் அனுப்பிய விம்பிள்டன் - குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!