தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹிட்மேன் சாதனையை முறியடித்த கப்தில்! - ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்தின் மார்டின் கப்தில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

Martin Guptill leapfrogs Rohit Sharma to record most sixes in T20Is
Martin Guptill leapfrogs Rohit Sharma to record most sixes in T20Is

By

Published : Feb 25, 2021, 4:02 PM IST

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று (பிப்.25) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 6 பவுண்டரிகள், 8 சிக்சர்களை விளாசி 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

இருப்பினும் இப்போட்டியில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை கப்தில் படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 127 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது அதனை கப்தில் முறியடித்து 132 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் 113 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்தின் காலின் முன்ரோ 110 சிக்சர்களுடன் நான்காம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 105 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: தடைகளை தாண்டி மைதானத்தில் இறங்கிய ரசிகர்

ABOUT THE AUTHOR

...view details