தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிக் பாஷ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட மார்கஸ் ஸ்டோனிஸ்! - பிக் பாஷ் தொடர் நாயகன் மார்கஸ் ஸ்டோனிஸ்

சிட்னி: 2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக்கின் தொடர் நாயகனாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Marcus Stoinis named BBL player of tournament
Marcus Stoinis named BBL player of tournament

By

Published : Feb 4, 2020, 12:50 PM IST

2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே- ஆஃப் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த பின், இறுதிப் போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதனிடையே பிக் பாஷ் லீக் தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு சிறந்த பிக் பாஷ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று பிக் பாஷ் லீக்கின் தொடர் நாயகனாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பில் அதிகபட்சமாக 26 வாக்குகளுடன் மார்கஸ் ஸ்டோனிஸ் முதலிடத்திலும், 24 வாக்குகளுடன் டாம் கரண் இரண்டாமிடத்திலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 23 வாக்குகளுடம் மூன்றாமிடமும் பிடித்தனர்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், ஐந்து அரைசதம் உட்பட 607 ரன்கள் குவித்துள்ளார். இதுகுறித்து மார்கஸ் ஸ்டோனிஸ் பேசுகையில், '' பிக் பாஷ் லீக் தொடரில், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடுவது நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி என்றுமே எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான அணி. ஒவ்வொரு போட்டியில் களமிறங்கும்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு ஆடுகிறேன். பிப்.6ஆம் தேதி சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிராக பெரிய ஆட்டம் எங்களுக்காக காத்திருக்கிறது. அதனை நல்லபடியாக ஆடி வெற்றிபெறவேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: வில்லியம்சனுக்குப் பதிலாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஹாங் காங் வீரர்!

ABOUT THE AUTHOR

...view details