ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 10ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, ஃபர்குசன் தலைமையிலான சிட்னி தண்டர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணியின் தொடக்க வீரர் ஃபிளெட்சர் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் - மேக்ஸ்வெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன் கணக்கை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்டோய்னிஸ் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
அதன்பின் 61 ரன்களை எடுத்திருந்த ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து 39 ரன்களுடன் மேக்ஸ்வெல்லும் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்களும், வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.