இந்திய கிரிக்கெட் அணி வீரராக அறியப்படுபவர் மனோஜ் திவாரி. நல்ல ஃபார்மில் இருந்த போதும் இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட இவர், மேற்கு வங்க கிரிக்கெட் அணிக்காக அதிக அளவிலான முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.
35 வயதான மனோஜ் திவாரி இன்று (பிப்.24) மம்தா பானர்ஜியின் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் மனோஜ் திவாரி போட்டியிட வாய்ப்புள்ளது.