இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் மலிங்காவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஏராளமான போட்டிகளை அவர் வென்று கொடுத்திருக்கிறார்.
இலங்கைக்கு டாட்டா சொல்லும் மலிங்கா! - malinga retired
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தனது ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் குடியேற இருக்கிறார்.
மலிங்கா
35 வயதான மலிங்கா நடந்துமுடிந்த உலகக்கோப்பைத் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்ததாக வங்கதேச அணியுடனான தொடரிலும் விளையாட இருக்கிறார். எனவே இந்தத் தொடர் முடிந்தவுடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், தனது ஓய்வுக்கு பிறகு மலிங்கா இலங்கையைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற இருக்கிறார். இதற்காக அங்கு அவர் வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார்.