நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, போக்ஹராவில் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று மகளிர் டி20 கிரிகெட் பிரிவில் வங்கதேசம் - மாலத்தீவு அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் நிகர் சுல்தானா, ஃபர்கானா ஆகியோரது சதத்தால் 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவித்தது. நிகர் சுல்தானா 65 பந்துகளில் 14 பவுண்டரி, மூன்று சிக்சர் என 113 ரன்களுடனும், ஃபர்கனா 53 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் 110 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, 256 ரன்கள் என்ற கடின இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய மாலத்தீவு அணி ஓரளவிற்கு தாக்குப் பிடித்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியோ 12.1 ஓவர்களில் ஆறு ரன்களுக்கே ஆல் அவுட்டானது. மகளிர் டி20 போட்டியில் குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணிகளின் பட்டியலில் மாலத்தீவு அணி, மாலி அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக்கொண்டுள்ளது. முன்னதாக, ரிவாண்டன் அணிக்கு எதிரான கிவிபுக்கா டி20 தொடரில் மாலி அணி ஆறு ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்: 6 ரன்களில் ஆல்-அவுட்டான அணி!