தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நியூசிலாந்தை புரட்டியது இங்கிலாந்து - தொடரிலும் சமநிலை! - டேவிட் மாலன் ஆட்டநாயகனாகத் தேர்வு

கிறிஸ்ட் சர்ச்: நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ENGLAND TOUR OF NEW ZEALAND

By

Published : Nov 8, 2019, 5:58 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தும்; அடுத்த இரண்டு போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன. இதனிடையே இன்று நான்காவது போட்டி நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது.

டேவிட் மாலன் - இயன் மோர்கன்

இதில் டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் சவுதி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி - டேவிட் மாலன், இயன் மோர்கன் அதிரடியால் 20 ஓவர்களில் 241 ரன்களை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில், காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. ஆனால், 27 ரன்கள் அடித்திருந்த நிலையில் கப்திலும், 30 ரன்களில் முன்ரோவும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பர்கின்சன்

இதன் பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் பர்கின்சனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி 39 ரன்களைச் சேர்த்தார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 16.5 ஓவர்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் பர்கின்சன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை அணியை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என சமநிலையை நிறுத்தியது. சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்திய டேவிட் மாலன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: நான்காவது டி20: நேப்பியரில் இங்கிலாந்து ரன் மழை

ABOUT THE AUTHOR

...view details