தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'என்னை ஹீரோவாக உணர வைத்த ரசிகர்களுக்கு நன்றி' - ரவிச்சந்திரன் அஸ்வின்! - சென்னை டெஸ்ட்

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் என்னை ஹீரோவாக உணரவைத்த ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

'making me feel like a hero' Ashwin Twitter
'making me feel like a hero' Ashwin Twitter

By

Published : Feb 16, 2021, 5:02 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை செப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தும் அசத்திய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில், “நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் கடந்த சில நாள்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய அணியின் வெற்றியைப் புகழ்ந்து பாடிய ‘தமிழ் புலவர்’ ஹர்பஜன் சிங்!

ABOUT THE AUTHOR

...view details