தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனிக்கு இடம் கிடைப்பது கடினம் - முகமது அசாருதின் - ஐபிஎல் 2020

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினமான விஷயம் என முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அசாருதின் தெரிவித்துள்ளார்.

Making comeback in international cricket after long time is not easy: Azharuddin
Making comeback in international cricket after long time is not easy: Azharuddin

By

Published : Apr 18, 2020, 11:52 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரும் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் கடந்த உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அசாருதின் அளித்துள்ள பேட்டியில், “தோனி இந்திய அணியில் இடம்பிடிப்பது தேர்வு குழுவினரின் கையில்தான் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு வீரரின் முந்தைய செயல்திறனைக் கொண்டே தேர்வு குழு அவரை அணியில் சேர்க்கும்.

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி, அணியில் தேர்வு செய்வதற்கு ஒருசில போட்டிகளிலாவது விளையாட வேண்டும். ஆனால் தோனி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. இதனால் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கேரளாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு கால்பந்தாட்ட வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details