கிரிக்கெட் போட்டிகளில் பந்துகளை உபயோகிக்க ஏதுவாக, அதன் மீது பந்துவீச்சாளர்கள் உமிழ்நீர் தடவுவது வழக்கம். அவ்வாறு தடவுவதால் பந்துகளை ஸ்விங் செய்வதற்கு உதவும். இதனால் பந்துகளை வைத்து இன்னும் சிறிது நேரம் ஸ்விங் செய்யலாம். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பந்துகளில் உமிழ் நீரை பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
இதற்கு பல்வேறு வீரர்களும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பந்துகள் மீது வீரர்கள் உமிழ்நீர் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், தேர்வுக்குழுத் தலைவருமான மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில், "கிரிக்கெட் விளையாடிவந்த ஆரம்ப காலங்களிலிருந்தே பந்துவீச்சாளர்கள் பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதை பழக்கமாகவே வைத்துள்ளனர். அதனால் தற்போது இந்தப் பழக்கத்தை மாற்றுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.