கோவிட் -19 வைரஸ் பெருந்தொற்றால் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கோவிட் -19 வைரஸ் தொற்றால் இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு ஏப்ரல் 4ஆம் தேதிவரை நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நடமாட்டம் குறைக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே அடைந்துள்ளனர். இந்தத் தருணத்தில், தான் எவ்வாறு நேரத்தை செலவழித்துவருகிறேன் என்பது குறித்து வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டன் தமிம் இக்பால் தனியார் விளையாட்டு இணையதளத்தில் பேசியுள்ளார்.