ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையிலுள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று (பிப். 18) நடைபெற்றது. இந்த வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 61 வீரர்கள் தேர்வுசெய்யப்படலாம் என்ற நிலையில், 57 வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுத்துள்ளன.
இதில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார்.
முன்னதாக 2015ஆம் ஆண்டு இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்ததே, ஒரு வீரரின் அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்துவந்தது.
ஐபிஎல் அணிகள் ஏலத்தில் வாங்கிய வீரர்கள் விவரம் (தொகை)
சென்னை சூப்பர் கிங்ஸ்
- ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் (9.35 கோடி ரூபாய்)
- ஆல்ரவுண்டர் மொயீன் அலி (7 கோடி ரூபாய்)
- பேட்ஸ்மேன் சட்டேஸ்வர் புஜாரா (50 லட்சம் ரூபாய்)
- ஆல்ரவுண்டர் பாகத் வர்மா (20 லட்சம் ரூபாய்)
- பேட்ஸ்மேன் ஹரி நிஷாந்த் (20 லட்சம் ரூபாய்)
- பந்துவீச்சாளர் ஹரிசங்கர் ரெட்டி (20 லட்சம் ரூபாய்)
டெல்லி கேப்பிட்டல்ஸ்
- டாம் கர்ரன் (5.25 கோடி ரூபாய்)
- ஸ்டீவ் ஸ்மித் (2.2 கோடி ரூபாய்)
- சாம் பில்லிங்ஸ் (2 கோடி ரூபாய்)
- உமேஷ் யாதவ் (1 கோடி ரூபாய்)
- ரிபல் படேல் (20 லட்சம் ரூபாய்)
- விஷ்ணு வினோத் (20 லட்சம் ரூபாய்)
- லுக்மன் மெரிவாலா (20 லட்சம் ரூபாய்)
- மணிமாறன் சித்தார்த் (20 லட்சம் ரூபாய்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- ஷாகிப் அல் ஹசன் (3.2 கோடி ரூபாய்)
- ஹர்பஜன் சிங் (2 கோடி ரூபாய்)
- பென் கட்டிங் (75 லட்சம் ரூபாய்)
- கருண் நாயர் (50 லட்சம் ரூபாய்)
- பவான் நெகி (50 லட்சம் ரூபாய்)
- வெங்கடேஷ் ஐயர் (20 லட்சம் ரூபாய்)
- ஷெல்டன் ஜாக்சன் (20 லட்சம் ரூபாய்)
- வைபவ் அரோரா (20 லட்சம் ரூபாய்)
மும்பை இந்தியன்ஸ்
- நாதன் குல்டர் நைல் (5 கோடி ரூபாய்)
- ஆடம் மில்னே (3.2 கோடி ரூபாய்)
- பியூஷ் சாவ்லா (2.4 கோடி ரூபாய்)
-
ஜேம்ஸ் நீஷம் (50 லட்சம் ரூபாய்)
- யுத்விர் சாரக் (20 லட்சம் ரூபாய்)
- மார்கோ ஜான்சன் (20 லட்சம் ரூபாய்)
- அர்ஜுன் டெண்டுல்கர் (20 லட்சம் ரூபாய்)
பஞ்சாப் கிங்ஸ்
- ஜேய் ரிச்சர்ட்சன் (14 கோடி ரூபாய்)
- ரிலி மெரிடித் (8 கோடி ரூபாய்)
- ஷாருக் கான் (5.25 கோடி ரூபாய்)
- ஹெண்டிரிக்ஸ் (4.2 கோடி ரூபாய்)
-
டேவிட் மாலன் (1.5 கோடி ரூபாய்)
- ஃபாபியன் ஆலன் (75 லட்சம் ரூபாய்)
- ஜலஜ் சக்சேனா (30 லட்சம் ரூபாய்)
- சவுரப் குமார் (20 லட்சம் ரூபாய்)
- உத்கர்ஷ் சிங் (20 லட்சம் ரூபாய்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
- கிறிஸ் மோரிஸ் (16.25 கோடி ரூபாய்)
- ஷிவம் தூபே (4.4 கோடி ரூபாய்)
- சேட்டன் சகாரியா (1.2 கோடி ரூபாய்)
-
முஷ்டபிசூர் ரஹ்மான் (1 கோடி ரூபாய்)
- லியம் லிங்ஸ்டோன் (75 லட்சம் ரூபாய்)
- கே.சி. கரியப்பா (20 லட்சம் ரூபாய்)
- ஆகாஷ் சிங் (20 லட்சம் ரூபாய்)
- குல்தீப் யாதவ் (20 லட்சம் ரூபாய்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- கெய்ல் ஜெமிசன் (15 கோடி ரூபாய்)
- கிளென் மேக்ஸ்வெல் (14.25 கோடி ரூபாய்)
- டேன் கிறிஸ்டியன் (4.8 கோடி ரூபாய்)
- சச்சின் பேபி (20 லட்சம் ரூபாய்)
-
ராஜட் படிதார் (20 லட்சம் ரூபாய்)
- முகமது அசாரூதின் (20 லட்சம் ரூபாய்)
- சுயாஷ் பிரபுதேசாய் (20 லட்சம் ரூபாய்)
- கே.எஸ். பரத் (20 லட்சம் ரூபாய்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- கேதர் ஜாதவ் (2 கோடி ரூபாய்)
-
முஜீப் ஸத்ரான் (1.5 கோடி ரூபாய்)
- ஜே. சுஜித் (30 லட்சம் ரூபாய்)
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்த அணிகளாலும் வாங்கப்படாமல் இருந்த முக்கிய வீரர்கள் :
- ஜேசன் ராய் (இங்கிலாந்து)
- மோர்னே மோர்கல் (தென் ஆப்பிரிக்கா)
- அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து)
- அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா)
- ஆடில் ரஷித் (இங்கிலாந்து)
- ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா)
- டேவிட் வில்லி (இங்கிலாந்து)
- ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா)
- எவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
- ஹனுமா விஹாரி (இந்தியா)
- ஷெல்டன் காட்ரோல் (வெஸ்ட் இண்டீஸ்)
- முஷ்பிக்கூர் ரஹிம் (வங்கதேசம்)
- மார்னஸ் லபுசாக்னே (ஆஸ்திரேலியா)
- பில்லி ஸ்டேன்லேக் (இங்கிலாந்து)
- மேத்யூ வேட் (ஆஸ்திரேலியா)
இதில் ஆரோன் ஃபின்ச், அலெக்ஸ் கேரி, எவின் லீவிஸ், ஷெல்டன் காட்ரோல், ஜெசன் ராய் ஆகியோர் கடந்த ஐபிஎல் சீசன்களில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அகமதாபாத் புறப்பட்ட இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்!