தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

11 போட்டிகள்... 5இல் வெற்றி... அசைக்க முடியாத ஆஸி.! 'பிங்க் டெஸ்ட்' - பகலிரவு டெஸ்ட் போட்டிகள் விவரம்

இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையே நாளை பிங்க் பால் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இதுவரை 11 பிங்க் பால் போட்டிகள் நடைபெற்றதில், அதிக முறையாக ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது.

Pink ball test

By

Published : Nov 21, 2019, 7:20 PM IST

வரலாற்று சிறப்பு மிக்க நாள்:

இந்திய கிரிக்கெட்டில் நாளைய நாள் (நவம்பர் 22) வரலாற்று சிறப்பு மிக்க நாளாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை சிவப்பு நிற பந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த இந்திய அணி முதல் முறையாக பிங்க் பால் (பகலிரவு டெஸ்ட்) போட்டியில் நாளை விளையாடவுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் பல மறக்க முடியாத தருணங்கள் அரங்கேறிய கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்தான், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இந்த வரலாற்று போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான வலைப்பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவரமாக ஈடுபட்டனர்.

பிங்க் நிறத்தில் வண்ணமையாக தோற்றமளிக்கும் ஈடன் கார்டன் மைதானம்

பகலிரவு டெஸ்ட் அறிமுகம்:

கிரிக்கெட்டின் முதல் ஃபார்மெட் டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், டி20 ஃபார்மெட்டின் வருகைப்பிறகு ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டி மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் குறைய தொடங்கியது. அந்தவகையில், கிரிக்கெட்டின் முதன்மையான ஃபார்மெட் டெஸ்ட் போட்டியை மேம்படுத்தும் வகையில், ஐசிசி பிங் பால் ( பகலிரவு டெஸ்ட்) போட்டி நடத்த 2012இல் அறிமுகப்படுத்தியது.

சிவப்புக்கு பதில் ஏன் பிங்க் பால்?

பகலிரவு போட்டி என்பதால் லைட் வெளிச்சத்தில் சிவப்பு நிற பந்துகளை விட பிங்க் நிற பந்துகள்தான் வீரர்களின் கண்களுக்கு நன்கு தெரியும் என்பதால்தான் பகலிரவு போட்டிக்கு பிங்க் நிற பந்துகளை ஐசிசி தேர்வு செய்தது.

பிங்க் பால்

முதல் பிங்க் பால் போட்டி:

2012இல் ஐசிசி பிங் பால் போட்டிக்கு கிரின் சிக்னல் கொடுத்திருந்தாலும், 2015, நவம்பர் 27ஆம் தேதி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அடிலெயிட்டில் நடைபெற்ற போட்டி தான் கிரிக்கெட்டின் முதல் பிங் பால் போட்டியாகும். ஐசிசியின் இந்த புதிய முயற்சியால், நிச்சயம் டெஸ்ட் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வருகை தருவார்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.

பிங்க் பால் போட்டிக்கு மறுத்த பிசிசிஐ:

இந்தியா கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இவ்விரு அணிகளுக்கிடையே அடிலெயிட்டில் நடைபெற்ற முதல் போட்டியை பிங்க் பால் போட்டியாக வைத்துகொள்ளலாமா என கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் வைத்த கோரிக்கையை பிசிசிஐ மறுத்துவிட்டது.

முதல் பிங்க் பால் போட்டி

தாதாவின் வருகையால் வரலாறு படைக்கும் இந்தியா!

பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்திய கிரிக்கெட் அணி பிங்க் பால் போட்டியில் விளையாடும் என அறிவித்தார். கங்குலியின் இந்த கோரிக்கைக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்றே வினாடிகளில் ஓ.கே சொன்னார்.

இதுவரை 11 பிங்க் பால் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், இந்தியா வங்கதேசம் அணிகளைத் தவிர எட்டு அணிகள் இந்த பிங்க் பால் போட்டியில் விளையாடியுள்ளன. அதில், ஆஸ்திரேலிய அணி அதிகமுறையாக ஐந்து போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி பிங்க் பால் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடக்கியுள்ளது. நாளைய போட்டி மூலம் பிங்க் பால் டெஸ்ட்டில் அறிமுகமாகும் இந்திய அணி, எதிர்வரும் காலங்களில் இதுபோன்று அதிகமான போட்டிகளில் விளையாடி பிங்க் பால் போட்டியிலும் தனது ஆதிகத்தை தொடருமா என்பது காலத்தின் கையில்தான் உள்ளது

பிங்க் பால் போட்டி

இதுவரை நடைபெற்ற பிங்க் பால் போட்டிகளின் விவரங்கள்:

மேட்ச் மைதானம் வெற்றி தேதி
ஆஸ்திரேலியா v நியூசிலாந்து அடிலெயிட் ஆஸி. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி நவம்பர் 27- டிசம்பர் 1, 2015
பாகிஸ்தான் v வெஸ்ட் இண்டீஸ் துபாய் பாகிஸ்தான் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அக்டோபர் 13-17, 2016
ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா அடிலெயிட் ஆஸி. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி நவம்பர் 24-28 2016
ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் பிரிஸ்பேன் ஆஸி. 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி டிசம்பர் 15-19, 2016
இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ் பிர்மிங்ஹாம் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆகஸ்ட் 17-21, 2017
பாகிஸ்தான் v இலங்கை துபாய் இலங்கை 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அக்டோபர் 6-10, 2017
ஆஸ்திரேலியா v இங்கிலாந்து அடிலெயிட் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி டிசம்பர் 2-6, 2017
தென் ஆப்பிரிக்கா v ஜிம்பாப்வே போர்ட் எலிசபர்த் தென் ஆப்பிரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி டிசம்பர் 26-29, 2017
நியூசிலாந்து v இங்கிலாந்து ஆக்லாந்து நியூசிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி மார்ச் 22-26, 2018
வெஸ்ட் இண்டீஸ் v இலங்கை பிரிட்ஜ்டவுன் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி ஜூன் 23-27, 2018
ஆஸ்திரேலியா v இலங்கை பிரிஸ்பேன் ஆஸி. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஜனவரி 24-28, 2019
இந்தியா v வங்கதேசம் கொல்கத்தா ? நவம்பர் 22 - 26, 2019

இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான பிங்க் பால் போட்டி நாளை பிற்பகல் 1 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனில் ஒளிப்பரப்பாகிறது.

ABOUT THE AUTHOR

...view details