கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று பாகிஸ்தான் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் ரசிகர்களுடன் உரையாடினார்.
அஸ்வின், ஜடேஜாவின் ஆதிக்கம் - மனம்திறந்த சக்லைன் முஷ்டாக் - டெஸ்ட் போட்டி
சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின், ஜடேஜாவின் ஆதிக்கம் குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
like-kuldeep-yadav-a-lot-he-has-got-a-big-heart-saqlain-mushtaq
சமகால கிரிக்கெட் வீரர்களில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை சக்லைன் முஷ்டாக் தேர்வு செய்துள்ளார். அதில், ''குறுகிய கால போட்டிகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரிடம் சிலமுறை பேசியுள்ளேன். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் நாதன் லயன் அனைத்து நாடுகளிலும் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். ஆனால் சொந்த மண்ணில் அஸ்வினைப் போல் வேறு எந்த வீரரும் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஜடேஜாவும் அஸ்வினுக்கு சிறந்த போட்டியாளராக உள்ளார்'' என்றார்.